OTP மற்றும் முக்கியமான எஸ்எம்எஸ்-களை பெறுவதில் நீங்கள் சிக்கல்களை சந்தித்தீர்களா?

 




எஸ்எம்எஸ் சேவைகளில் பெரும் இடையூறு ஏற்பட்டதால் பல வாடிக்கையாளர்கள் வங்கிகள், ஈ-காமர்ஸ் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து இன்று (08.03.2021 to 09.03.2021) ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) எஸ்எம்எஸ் மூலம் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது CoWIN ரெஜிஸ்டிரேஷன் OTPக்கள், டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான வங்கி OTPக்கள் மற்றும் ஆன்லைன் கணக்குகளில் உள்நுழைய டூ-ஃபாக்டர் அங்கீகார OTPக்கள் போன்ற அமைப்புகளிலிருந்து எல்லாவற்றையும் பாதிக்கும் ஒரு தொழில்துறை அளவிலான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் இது குறித்து அதிகாரப்பூரவமான அறிக்கைகளை வெளியிடவில்லை என்றாலும், புதிய எஸ்எம்எஸ் விதிமுறைகளே இதற்குக் காரணம் என்று தொழில் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. எஸ்எம்எஸ் மோசடியைக் கட்டுப்படுத்த இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது செயல்பாட்டில் பல சிக்கல்களையும் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. அடிப்படையில், ஆபரேட்டர்கள் புதிய DLT செயல்முறையை செயல்படுத்தியுள்ளனர் என்றும் இது புஷ் அறிவிப்புகளை பாதித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் (Distributed Ledger Technology - DLT) என்பது ஒரு தொகுதி-சங்கிலி அடிப்படையிலான பதிவு அமைப்பு ஆகும்.

TRAI -ன் (Telecom Regulatory Authority of India) படி, டெலிமார்க்கெட்டர்கள் DLT பிளாட்பார்மில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பல்வேறு சந்தைப்படுத்தல் நிறுவனங்களிடமிருந்து எஸ்எம்எஸ் ஸ்பேமைக் கட்டுப்படுத்தும் பொது நலனுக்காக வழங்கப்படுகிறது என பொறியியலாளர் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு தீர்வுகள் நிறுவனமான கோர்பாக்டர்ஸ் விளக்கியுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கையை செயல்படுத்துவது சுமூகமாக நடக்கவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக, பலர் சில முக்கியமான எஸ்எம்எஸ் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இன்று மக்கள் பலர் தன்னகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாள் முழுவதும் ட்வீட் செய்து வருகின்றனர். மேலும் இந்த பிரச்சனைகளை சரிசெய்ய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்பேம் எஸ்எம்எஸ் செய்திகளைக் குறைக்கும் நோக்கில் டெலிகாம் கம்யூனிகேஷன்ஸ் வாடிக்கையாளர் விருப்பத்தேர்வு விதிமுறைகள் (Telecom Communications Customer Preference Regulations-TCCCPR) 2018-ஐ தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இன்று முடிவெடுத்துள்ளதாக தகவல்களும் கிடைத்துள்ளன. நாட்டில் ஏராளமான மக்களை தொந்தரவு செய்த எஸ்எம்எஸ் சேவைகளில் பெரும் இடையூறு ஏற்பட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் TRAI வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எந்தவொரு வாடிக்கையாளர் சிரமத்திற்கும் நாங்கள் கவலைப்படுகிறோம். மேலும் திங்களன்று செயல்படுத்தப்பட்ட எஸ்எம்எஸ் ஸ்க்ரப்பிங்கை 7 நாள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளோம்" என்று கூறியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட DLT செயல்முறை காரணமாக பாதிக்கப்பட்ட பல மக்கள் OTPக்களைப் பெறாததால் ஆத்திரமடைந்தனர். சில வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்கள் எஸ்எம்எஸ் செய்திகளில் OTPக்களைப் பெறும்போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து பயனர்களுக்கு தெளிவுபடுத்தின.

TCCCPR உடன், தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் தங்கள் நெட்வொர்க்குகளில் ஸ்பேம் செய்திகளைக் கட்டுப்படுத்த உள்ளடக்க ஸ்க்ரப்பிங்கை செயல்படுத்துமாறு TRAI அறிவுறுத்தியது. எவ்வாறாயினும், ஒவ்வொரு எஸ்எம்எஸ் செய்தியும் பதிவுசெய்யப்பட்ட டெம்ப்லேட்டுடன் சரிபார்க்கப்படுவதால், இந்த செயல்முறை OTPக்களை வழங்குவதில் தாமதம் மற்றும் தோல்வி ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாட்ஸ்அப் வெப் ஷார்ட்கட்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்!

வாரத்தில் 2 நாள் கட்டாயம்.. ஐடி ஊழியர்களுக்கு வந்தது புதிய உத்தரவு..! #WFH

குழந்தைக்கு ஆதார் கார்டு அப்ளை செய்வது எப்படி? | How to apply child aadhar card in tamil..!