10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் விநியோகம்:Tamilnadu 10th (SSLC) Hall Tickets 2019-2020 Available Now, Download Tamil Nadu Public exam SSLC Admit Cards at dge.tn.gov.in
தமிழகத்தில் ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 16ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 18ஆம் தேதியும் நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு மையங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாலும், ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத உள்ளதாலும், புதிய ஹால் டிக்கெட்டுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும், தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களும் www.dge.tn.gov.in என்ற தேர்வுத்துறையின் இணையதளத்தில் இருந்து தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக ஹால் டிக்கெட்டுகளை பெற முடியாத மாணவர்கள் யாரேனும் வெளி மாவட்டம் அல்லது வெளி மாநிலங்களில் இருந்தால், தேர்வுக்கு முந்தைய நாள் பள்ளிக்கு சென்...