தமிழ்நாடு பத்தாம் வகுப்பு ரிசல்ட் எப்போது தெரியுமா?:When will the Tamil Nadu 10th Class Result:
ஜுன் 15ஆம் தேதி 10ஆம் வகுப்புத் தேர்வும், 16 ஆம் தேதி 11ஆம் வகுப்பின் விடுபட்ட பாடத்துக்கான தேர்வும் அதனைத் தொடர்ந்து 12ஆம் வகுப்பைச் சேர்ந்த கடைசித் தேர்வை எழுத முடியாத 36 ஆயிரம் மாணவர்களுக்கு பொதுத் தேர்வும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3வது வாரத்தில் வெளியிடப்படும்” எனக் கூறியுள்ளார். “கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தேர்வு எழுத வரும் மாணவர்கள் தனி வாகனம் மூலம் அழைத்துவரப்பட்டு தனி அறைகளில் தேர்வு எழுதவைக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு வாகனத்திலேயே அழைத்துச் செல்லப்படுவர். 8,9ஆம் தேதி ஹால் டிக்கெட் வழங்கும்போது ஒவ்வொரு மாணவருக்கும் தலா இரண்டு முகக் கவசங்கள் வழங்கப்படும். ஆன்லைன் மூலம் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சில பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்...