வாரத்தில் 2 நாள் கட்டாயம்.. ஐடி ஊழியர்களுக்கு வந்தது புதிய உத்தரவு..! #WFH

 கடந்த வாரமே பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு அலுவலகம் வருவதற்கு தயாராக இருக்க அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஹைப்ரிட் கலாச்சாரத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டு உள்ள நிலையில் முக்கியமான அப்டேட் ஐடி ஊழியர்களுக்கு வந்துள்ளது.



ஹைப்ரிட் கலாச்சாரம் வீட்டில் இருந்து பணியாற்றுவது எந்த அளவிற்கு நன்மை இருக்கிறதோ, அதே அளவிற்குச் சிக்கல்களும் உள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள் மத்தியில் ஹைப்ரிட் கலாச்சாரத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் ஊழியர்கள் மற்றும் நிறுவனம் என இரு தரப்புக்கும் அதிகப்படியான லாபம்.




2 நாள் கட்டாயம் விப்ரோ, டிசிஎஸ் மற்றும் இதர முன்னணி ஐடி நிறுவனங்கள் ஹைப்ரிட் வேலை காலச்சாரத்தை உடனடியாக நடைமுறை செய்ய முடிவு செய்துள்ள நிலையில் வாரத்திற்கு 2 நாள் கட்டாயம் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது.





விப்ரோ நிறுவனம் விப்ரோ நிறுவனத்தில் இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்ட மூத்த மேனேஜர்கள் மற்றும் அதற்கு மேல் பதவிகளில் உள்ளவர்கள் வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களில் அலுவலகத்தில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளது. இந்த முறை வருகிற மார்ச் 2 முதல் நடைமுறைக்கு வருகிறது.


அதே நேரத்தில் மற்ற ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் அணியின் விருப்பம், தேவை, அழைப்பு அடிப்படையில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்கப்படுகின்றனர்.





டிசிஎஸ் டிசிஎஸ் நிறுவனம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருக்கும் அனைத்து அலுவலகத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் குறிப்பிட்ட அளவிலான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அடுத்தச் சில வாரத்தில் பகுதி பகுதியாக அனைத்து அலுவலகத்தில் ஊழியர்களை அழைக்கும் பணிகளைத் துவங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.


காக்னிசென்ட் ஏப்ரல் மாதம் முதல் ஊழியர்களைப் பகுதி பகுதியாக அலுவலகத்திற்கு அழைக்க உள்ளதாகக் காக்னிசென்ட் நிறுவனத்தின் ஹைச்ஆர் பிரிவின் உயர் துணை தலைவர் சாந்தனு ஜா தெரிவித்துள்ளார்.





சிறு ஐடி நிறுவனங்கள் இதேபோல் நாட்டின் பல சிறிய ஐடி நிறுவனங்கள் 100 சதவீத ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் பல ஊழியர்களைப் பல மாதங்களுக்கு முன்பாகவே ரோடேஷன் முறையில் அழைத்துள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாட்ஸ்அப் வெப் ஷார்ட்கட்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்!

குழந்தைக்கு ஆதார் கார்டு அப்ளை செய்வது எப்படி? | How to apply child aadhar card in tamil..!