குழந்தைக்கு ஆதார் கார்டு அப்ளை செய்வது எப்படி? | How to apply child aadhar card in tamil..!
குழந்தைக்கு ஆதார் கார்டு பெறுவது எப்படி?
How to apply child aadhar card in tamil:- வணக்கம் நண்பர்களே இப்போதெல்லாம் அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் கார்டு இன்றியமையாத ஒரு அட்டையாக அமைத்து விட்டது. இந்தியாவில் ஆதார் கார்டு இல்லாமல் எந்த ஒரு வேலைகளையும் செய்ய முடியாது. எனவே இந்திய அரசாங்கம் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆதார் கார்டினை பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. எனவே இந்த பதிவில் தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெறுவது எப்படி? அதற்கு என்னென்ன சான்றிதழ் அவசியம் தேவைப்படும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக படித்தறிவோம் வாங்க.
குழந்தையின் 6 மாதம் முதல் 5 வயது வரை குழந்தைக்கு ஆதார் கார்டு பெரும் முறை.
முதலில் தங்கள் குழந்தையை ஆதார் கார்டு பதிவு செய்யும் மையங்களுக்கு நேராக அழைத்து செல்ல வேண்டும்.
தங்கள் குழந்தையை அழைத்து செல்லும் போது அந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவைப்படும். மேலும் அந்த குழந்தையின் தந்தை அல்லது தாயின் கை ரேகை மற்றும் அவர்களின் ஆதார் எண் ஆகியவற்றை இணைத்து தங்கள் குழந்தைக்கு ஆதார் கார்டு அப்ளை செய்யலாம். பின் 90 நாட்கள் கழித்து குழந்தைக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும். அதாவது உங்கள் குழந்தைக்கான ஆதார் அட்டை உங்கள் வீட்டு முகவரிக்கு 90 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.
5 வயதிற்குட்பட்ட குழந்தை என்பதால் இவர்களுக்கு பயோமெட்ரிக் முறை மேற்கொள்ளப்பட மாட்டாது. பயோமெட்ரிக் முறை என்பது குழந்தையின் கண்கள் மற்றும் கைரேகைகள் ஸ்கேன் செய்யமாட்டார்கள். இந்த குழந்தைகள் 5 வயதை கடந்த பின்புதான் இவர்களுக்கு பயோமெட்ரிக் முறை பின்பற்றப்படும்.
ஐந்து வயதிற்கு மேற்பட்ட 15 வயதிற்குட்டபட்ட குழந்தைகளுக்கு எப்படி ஆதார் கார்டு பெறுவது?
குழந்தையின் ஐந்து வயது பூர்த்தியடைந்த பின் அவர்களுக்கு மீண்டும் ஆதார் கார்டு அப்டேட் செய்ய வேண்டும். எனவே திரும்பவும் தங்கள் ஊரில் அருகில் உள்ள ஆதார் கார்டு பதிவு செய்யும் மையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். குழந்தையின் பழைய ஆதார் கார்டு எண்ணினை பயன்படுத்தியே குழந்தைக்கு ஆதார் கார்டு அப்டேட் செய்யலாம். இதற்கு தேவைப்படும் சான்றிதழ்கள் குழந்தையின் பள்ளி அடையாள அட்டை ஆவணங்களாக சேர்க்கப்படும். இப்பொழுது குழந்தைக்கு பயோமெட்ரிக் முறை பின்பற்றப்படும், அதாவது குழந்தையின் கண் கருவிழிகள் மற்றும் குழந்தையின் கைரேகைகள் ஸ்கேன் செய்து அடையாளமாக பதிவு செய்வார்கள். பின் மீண்டும் உங்கள் குழந்தைக்கான புதிய ஆதார் அட்டை உங்கள் வீட்டு முகவரிக்கு 90 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.
பின் குழந்தையின் 15 வயது பூர்த்தியடைந்த பின் மீண்டும் ஒரு முறை குழந்தைக்கு ஆதார் கார்டு அப்டேட் செய்ய வேண்டும்.
User Manual On Child Enrolment Lite Client (CELC)
👇

கருத்துகள்
கருத்துரையிடுக