மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு: Job Opportunity in Central Government Agricultural Institute

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள களப்பணியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் ஜூன் 21ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.



நிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம் 
மேலாண்மை : மத்திய அரசு
 
பணி : களப்பணியாளர் 

மொத்த காலிப் பணியிடம் : 02 

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்களை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

ஊதியம் : ரூ.18,000 மாதம் 

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.iari.res.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 21.06.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி : gopal_icar@yahoo.co.in 
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் www.iari.res.in .

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாட்ஸ்அப் வெப் ஷார்ட்கட்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்!

வாரத்தில் 2 நாள் கட்டாயம்.. ஐடி ஊழியர்களுக்கு வந்தது புதிய உத்தரவு..! #WFH

குழந்தைக்கு ஆதார் கார்டு அப்ளை செய்வது எப்படி? | How to apply child aadhar card in tamil..!