புகையிலை - ஒரு மாபெரும் கொலைகாரன், ஒரு நாளைக்கு 2500 பேரை கொல்லும் தீவிரவாதி!

தினந்தோறும் சராசரியாக 2500 பேரை இந்தியாவில் மட்டும் கொல்லும் ஒரு தீவிரவாதி தான் புகையிலை. எனவே தான் உலக சுகாதார நிறுவனம் (Word Health Organization) 1988 ஆம் ஆண்டே, மே 31 - ஐ உலக புகையிலை ஒழிப்பு நாளாக (World No Tobacco Day) அறிவித்து உள்ளது. ஆனால் காதலர் தினம் கொண்டாடும் நம்மில் பலருக்கு இந்த புகையிலை ஒழிப்பு தினம் பற்றி தெரிந்திருக்காது. ஏனெனில் ஊடகங்கள் இது பற்றி பெரிதாய் பேசுவதில்லை.

ஒரிருவர் கொல்லப்படும் விபத்துகள் பற்றியும், சிறு திருட்டுகள் பற்றியும் செய்திகள் வெளியிடும் ஊடகங்கள் ஒரு நாளைக்கு 2500 பேரை இருதய நோய், புற்றுநோய், காசநோய், நுரையீரல் நோய் போன்ற பல்வேறு நோய்களால் கொல்லும் புகையிலை பற்றி செய்திகள் வெளியிடுவதில்லை.

ஓர் ஆண்டுக்கு இந்தியாவில் சராசரியாக 10 இலட்சம் பேர் புகையிலை சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டு மரணமடைகிறார்கள். ஆனால் இறக்கும் ஒவ்வொருவரின் இறப்பிற்கும் என்ன காரணம் என்று கேட்டால், அந்தந்த நோய்களின் பெயரைத்தான் சொல்வார்கள். உண்மையில் அந்த நோய்கள் ஏற்பட காரணம் என்னவென்று ஆராய்ந்தால் மட்டுமே புகையிலை தான் அந்த மரணத்திற்கு அடிப்படை காரணம் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அதுபோக புகையிலை பொருட்களை பயன்படுத்தியவுடன் யாரும் நோய்க்கு ஆளாவதில்லை, இறப்பதில்லை. புகையிலை என்பது ஒரு கொஞ்சம் கொஞ்சமாக உடலை வருத்தி, தொடர்ந்த உபயோகத்திற்கு பிறகு 'புகையிலை பயன்பாட்டால் தான் இவர் இறக்கிறார்' உண்மையின் சுவடே தெரியாமல் கொல்லும் ஸ்லோ பாய்ஸன்.

பல வெளிநாடுகளில் இந்த அடிப்படை காரணத்தை புரிந்து கொண்டு, நீதிமன்றங்களில் புகையிலை நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, அதில் வெற்றி பெற்று பலரும் இழப்பீட்டு தொகையாக பல இலட்சங்களை பெற்றுள்ளார்கள்.

நீங்கள் இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் இந்த நொடியில் பல பேர் புகையிலையால் இறந்து கொண்டு இருப்பார்கள். தினம் தினம் நிகழும் இந்த 2500 மரணங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டு இருக்க வேண்டியவை. தங்கள் சுய லாபத்திற்காக புகையிலை நிறுவனங்கள் செய்யும் விளம்பர யுக்திகளும், மக்களை ஆட்டிப்படைக்கும் அறியாமை என்ற கொடிய அரக்கனும் தான் இந்த கொலைகளுக்கு மிக முக்கிய காரணங்கள்.

இந்த கொலைகளை தடுக்க வேண்டி உலக நாடுகள் இணைந்து உருவாக்கியது தான் உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை கட்டுப்பாட்டிற்கான சட்டப்பூர்வமான ஒப்பந்தம் (Framework Convention for Tobacco Control). முன் எப்போதும் இல்லாத வகையில் பொது சுகாதாரத்திற்காகவே, உலக நாடுகள் இணைந்து சட்டப்பூர்வமாக கொண்டு வந்திருக்கும் முதல் ஒப்பந்தம் இது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அதன் ஷரத்துக்களை பின்பற்றியே ஆக வேண்டும்.

இந்த சட்டப்பூர்வமான ஒப்பந்தம் பற்றிய பேச்சுகள் 1996 ஆம் ஆண்டு தொடங்கி, உலக சுகாதார நிறுவன அவையில் 2003 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு உலக நாடுகளின் கையெழுத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு 40 நாடுகள் கையெழுத்திட்டதால், இந்த ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வந்தது.

2011 ஆண்டின்புள்ளி விவரப்படி,இந்த ஒப்பந்தத்தில் 172 உலக நாடுகள் கையெழுத்து இட்டு இருக்கின்றன. நமது இந்திய நாடு 2004 ஆண்டிலேயே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது. ஒப்பந்தத்தில் கூறியுள்ள படி, புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துக்கொண்டு வருகிறது.

இந்த ஒப்பந்தத்தின் படி, 2020 ஆண்டுக்குள் இந்தியா தனது புகையிலை பயன்பாட்டில் 50% குறைத்துக் கொள்வதாக உறுதி கூறியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளது.

இப்படி மானாவாரியாக மக்களை கொல்லும் இந்த புகையிலைப் பொருட்களை கட்டுப்படுத்த அரசு என்ன செய்கிறது என்று பலரும் கேள்வி கேட்கிறார்கள். புகையிலை பொருட்களை முழுவதுமாக தடை செய்து விட வேண்டியது தானே என்றும் சொல்கிறார்கள். சரி தான், இன்னும் சில ஆண்டுகளில் புகையிலைப் பொருட்களை முழுவதுமாக தடைசெய்யத்தான் போகிறார்கள், அதன் முதல் பகுதியாகத்தான் புகையிலை பயன்பாட்டில் 50% குறைப்பது. பின்னர் படிப்படியாக குறைத்து முழுவதுமாக நிறுத்தப்போகிறார்கள். ஆனால் 'எப்போது' என்பது தான் விடை தெரியாத கேள்வி!

புகையிலை கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தின்படி, சிகெரெட் மற்றும் மற்ற புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு சட்டம் (Cigarette and Other Tobacco Products Act- COTPA 2003)கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி

கல்வி நிறுவனங்களைச் சுற்றியும், உள்ளேயும் புகையிலை பொருட்கள் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றி உள்ள கடைகளில் இது பற்றி பலகை தொங்க விடப்பட்டு இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களின் நுழைவாயில்களில் “இது ஒரு புகையிலை இல்லா கல்வி நிறுவனம்” என்ற பலகையும், அதில் புகையிலை பொருட்கள் பயன்படுத்தினால யாருக்கு புகார் கொடுக்க வேண்டும் என்ற விபரமும் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாட்ஸ்அப் வெப் ஷார்ட்கட்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்!

வாரத்தில் 2 நாள் கட்டாயம்.. ஐடி ஊழியர்களுக்கு வந்தது புதிய உத்தரவு..! #WFH

குழந்தைக்கு ஆதார் கார்டு அப்ளை செய்வது எப்படி? | How to apply child aadhar card in tamil..!